4 சக்கர வாகனங்களுக்கு FastTag கருவி; மத்திய அரசு உத்தரவு

திங்கள், 6 நவம்பர் 2017 (18:46 IST)
டிசம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் FastTag கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 
சுங்கச்சாவடியில் நான்கு சக்கர வாகனங்களிடம் சுங்கவரி வசூலிக்கும்போது வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தும்போது சில்லரை தட்டுபாடு பிரசனைகளும் ஏற்படுகிறது. 
 
இதை தவிர்க்க தற்போது மத்திய நான்கு சக்கர வாகனங்களுக்கு FastTag கருவி பொறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் அனைத்து 4 சக்கர வாகனங்களிலும் FastTag கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பொருத்துவதன்மூலம் வாகன ஓட்டிகள் FastTagயில் இருந்து தானியங்கி மூலம் பணம் செலுத்தலாம். 
 
சுங்கச்சாவடியிலும் இதற்கான சென்சார் கருவிகள் பொறுத்தப்படும். இதனால் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும்போது தானாகவே FastTagயில் சேமிப்பில் வைத்திருக்கும் பணம் செலுத்தப்படும். இந்த திட்டம் மூலம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்