விமானம் விட்ட புகையால் சிதறிய பஸ் கண்ணாடி; பயணிகள் காயம்

சனி, 8 ஜூலை 2017 (15:21 IST)
டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் விட்ட புகையால் பயணிகள் பயணித்த பஸ் கண்ணாடிகள் உடைந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து மும்பை செல்ல இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் பஸ்ஸில் சென்றுள்ளனர். அப்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிரங்கி பார்க்கிங் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் விமானம் ஜெட் பிளாஸ்ட் செய்துள்ளது.
 
ஜெட் பிளாஸ்ட் என்பது விமானத்தில் இருந்து அதிகப்படியான புகையை வெளியேற்றுவது. இந்த ஜெட் பிளாஸ்ட் பெரும்பாலும் விமானம் டேக் ஆப் ஆகும் போது செய்யப்படும். இதனால் இண்டிகோ விமானத்திற்கு பயணிகள் பயணித்த பஸ் கண்ணாடி நொறுங்கியது. 
 
இதனால் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாரிகளின் மெத்தனத்தால் இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்