தீபாவளியை ஒட்டி ரூ.30,000 கோடிக்கு தங்கம் விற்பனை.. நகைக்கடை வணிகர்கள் தகவல்..!

சனி, 11 நவம்பர் 2023 (09:26 IST)
தீபாவளிக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வாங்குவது போல் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் வாங்குவது பொதுமக்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு தீபாவளியின் போது, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும் என்பதும் பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கத்தை வாங்கி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி தங்கம் விலை சற்று குறைந்து இருந்ததால் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் ரூபாய் 30,000 கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையாகி உள்ளதாக தங்க நகை வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
தீபாவளி தினத்தில் தங்கம் வெள்ளி விற்பனை கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 41 டன் தங்கம் மற்றும் 400 டன் வெள்ளி தீபாவளி பண்டிகையை ஒட்டி விற்பனை ஆகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  

இந்தியர்களைப் பொறுத்தவரை தங்கம் ஒரு அணிகலன் மட்டும் இன்றி ஒரு நல்ல முதலீடு என்றும் புரிந்து வைத்துள்ளது இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்