மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு.. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அமல்!
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (14:56 IST)
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.
இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத தொகுதிகள் ரிசர்வ் செய்யப்படும்.
ஆனால் இந்த மசோதா உடனே அமலுக்கு வராது என கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும், அதன்பின்னரே இந்த மசோதா அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.