மகாராஷ்டிராவில் கருப்பைகளை நீக்கிய 30 ஆயிரம் பெண்கள்: அதிர்ச்சி காரணம்!

புதன், 25 டிசம்பர் 2019 (22:27 IST)
மகாராஷ்டிராவில் மாதவிடாய் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக 30 ஆயிரம் பெண்கள் கருப்பையை நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் நிதின் ராவத் என்பவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதமொன்றில் ’மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மாதவிடாய் சுழற்சி காலங்களில் பணிக்கு செல்ல முடியாமல் இருப்பதால் 30 ஆயிரம் பெண்கள் கருப்பையை நீக்கி இருப்பதாகவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் தான் கருப்பையை நீக்கியவர்களில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மாதவிடாய் காலங்களில் விடுமுறை எடுத்தால் தங்களுக்கு சம்பளம் இழக்க நேரிடும் என்பதால் சம்பள இழப்பை தவிர்ப்பதற்காக 30 ஆயிரம் பெண்கள் தங்களுடைய கருப்பையை நீக்கியுள்ளதாகவும், இதுகுறித்து உடனடியாக முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்களின் வாழ்வாதாரம் குறித்து சரியான திட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
விடுமுறை காலத்தில் சம்பளம் இழக்கப்படும் என்பதால் கருப்பையை நீக்கியவர்கள் குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்