தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் திடீர் மாற்றம்

செவ்வாய், 24 டிசம்பர் 2019 (08:11 IST)
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. எனவே உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுவதை அடுத்து ஜனவரி 2-ஆம் தேதியும் பள்ளிகள் விடுமுறை என்றும் இதனை அடுத்து மேலும் ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என்றும் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் கூடுதலாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரையாண்டு தேர்வு, உள்ளாட்சித் தேர்தல், ம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என மொத்தமாக பத்து நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்