மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 3 பேர் பலியானதால் அதிர்ச்சி..!

புதன், 27 டிசம்பர் 2023 (08:01 IST)
இந்தியாவில் மீண்டும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதித்த மூன்று பேர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
நாடு முழுவதும் தற்போது 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றும் ஜேஎன் 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 
 கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்து உள்ளனர்.  புத்தாண்டு மற்றும் பொங்கல் நெருங்கி வரும் வேளையில் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல்  ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்