27 சதவிகித இட ஒதுக்கீடு: முதல்முறையாக 2,544 OBC மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு

செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:17 IST)
27 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக வரலாற்றில் முதல்முறையாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்து 544 பேருக்கு மருத்துவ மேற்படிப்பு பயிலும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த 2544 பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மேற்படிப்பு மருத்துவ மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இது 27 சதவீத இட ஒதுக்கீடுக்கு உழைத்த அனைத்து கட்சியினருக்கும் பெருமையானது என்பது குறிபிடத்தக்கது. கடந்த பல ஆண்டுகளாக பல அரசியல் கட்சிகள் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் காரணமாகவே தற்போது இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்