ஓரினச்சேர்க்கை மோகம்.. கணவரின் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்த இளம்பெண் கைது.!

Siva

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (12:15 IST)
ஓரினச்சேர்க்கை மோகம் காரணமாக கணவரின் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவான இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரை கடந்த ஆண்டு 24 வயது இளம்பெண் ஒருவர் திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் சில ஆண்டுகள் மட்டுமே ஒற்றுமை இருந்தது

இதனை அடுத்து கணவரின் சொந்தக்கார சிறுமியான 16 வயது சிறுமியுடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் இது லெஸ்பியன் என்ற உறவை அடைந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் திடீரென இருவரும் தலைமறைவான நிலையில் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினர் இடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அவர்களை தேடி கண்டுபிடித்து மீட்டனர். இதில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை   கொடுத்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 24 வயது பெண் கைது செய்யப்பட்டார்

இருவரும் கணவன் மனைவி போல் சில மாதங்கள் வாழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இளம் பெண் மீது கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்