பாவத்தின் பிடியில் சிக்கி பாலைவனமாய் மாறிய கிராமம்!!

செவ்வாய், 16 மே 2017 (16:51 IST)
மக்களின் சாபத்தால் 200 ஆண்டுகளாக ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடி கிடக்கும் கிராமம் ஒன்று ராஜஸ்தானில் உள்ளது.


 
 
ராஜஸ்தான் ஜெய்சால்மர் நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது குல்தரா கிராமம். ஒரு காலத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்த ஊராக இது திகழ்ந்தது. 
 
ஆனால், தற்போது பாவத்தின் பிடியில் சிக்கி பாலைவனம் போல் இருப்பதாக அருகில் உள்ள ஊர்மக்கள் கூறுகின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் பலிவால் பிராமணர்கள் வசித்து வந்தனர். 
 
அப்போது சலிம் சிங் என்பவர் வரி வசூலிப்பவராக பணியாற்றினார். அவர் அந்த கிராமத்தின் தலைவர் மகளை காதலித்தார். அவளை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். 
 
இதனால், அப்பகுதியில் இருந்த கிராம மக்கள், தங்கள் ஊரை விட்டு கிளம்பியுள்ளனர். அவ்வாறு செல்லும்போது, அவ்வூரில் இனி யாரும் வசிக்கக் கூடாது என்று சாபம் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 
 
அந்த கிராமத்தில் இருந்து வந்த அபாயகரமான ஒலிகளால் பயந்து, மக்கள் அங்கு யாரும் செல்வதில்லை. தற்போது, அந்த கிராமம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்