பஸ் - லாரி மோதி விபத்து: 18 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலி

புதன், 28 ஜூலை 2021 (09:38 IST)
உத்திர பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 
உத்திர பிரதேச மாநிலம் பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பஞ்சாப் மற்று ஹரியானாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பேருந்தி அழைத்து வரப்பட்ட போது பேருந்து பழுதானதால் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரம் ஓய்வெடுத்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு லாரி பேருந்து மீது பின்பக்கமாக வந்து மோதியதில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்