ஆதார் எண் மோசடி: 6 வயது சிறுவன் பெயரில் 18 டிரைவிங் லைசென்ஸ்
திங்கள், 12 செப்டம்பர் 2016 (13:04 IST)
ஆந்திராவில் 6 வயது சிறுவனின் ஆதார் எண்ணை பயன்படுத்தி 18 டிரைவிங் லைசென்ஸ் மோசடியாக பெறப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டம் மங்களம் குண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகன் பாபையா (வயது 6).
சிறுவன் பாபையாவின் ஆதார் எண்ணை ரேஷன் அட்டையில் பதிவு செய்ய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாபையாவின் ஆதார் எண்ணை பயன்படுத்தி வெவ்வேறு முகவரிகளில் 18 டிரைவிங் லைசென்ஸ் மோசடியாக பெறப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இவை அனைத்தும் இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்சுகள், அனைத்து லைசென்ஸ்களிலும் வெவ்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த டிரைவிங் லைசென்சுகளை யார்-யார் எடுத்தது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் 6 வயது சிறுவனுக்கு, 18 லைசென்ஸ் வழங்கிய லைசென்ஸ்களை வழங்கிய அதிகாரிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.