ஆம், பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 17 பேர் உயிரிழந்தனர். பகல்பூர் மாவட்டத்தில் 6, வைஷாலி மாவட்டத்தில் 3, பாங்கா, ககாரியா மாவட்டங்களில் தலா 2, முங்கர், மாதேபுரா மற்றும் கதிஹார் மாவட்டங்களில் ஒருவர் என 17 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளதாவது, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மக்கள் மோசமான வானிலையில் வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இடியுடன் கூடிய மழையின் போது பேரிடர் மேலாண்மை குழு வழங்கும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.