110 நாட்கள் உண்ணாவிரதம்.. 16 வயது ஜெயின் சிறுமி சாதனை..!

திங்கள், 30 அக்டோபர் 2023 (09:05 IST)
16 வயது ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர்  110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை செய்துள்ளார்.  

மும்பையை சேர்ந்த ஜெயின் சமூகத்தின் 16 வயது கிரிஷா என்ற சிறுமி 16 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் 16 நாட்கள் முடிவடைந்த போது அவரது உடலில் எந்த பிரச்சனையும் ஏற்படாததால் அவரது ஆன்மீக குருவின் அனுமதி பெற்று 110 நாட்கள் உண்ணாவிரதத்தை நீடித்தார்.

 உண்ணாவிரத காலத்தில் கிரிஷா காலை 9 மணி முதல் மாலை ஆறு முப்பது மணி வரை வெறும் காய்ச்சிய தண்ணீர் மட்டுமே பருகுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 110 நாட்கள் உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்துள்ள கிரிஷா எடை 18 கிலோ குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை பதினோராம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கிய கிரிஷா 110 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்து விட்டு தனது ஆன்மீக குருவிடம் ஆசி பெற்று கொண்டார். பதினோராம் வகுப்பு படிக்கும் கிரிஷா உண்ணாவிரதத்தின் போது மத நூல்களை படித்தும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தியும் இருந்துள்ளார்.

மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை தனது உண்ணாவிரதம் எடுத்துக்காட்டி உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்