பெங்களூரில் 144 தடை உத்தரவு

திங்கள், 12 செப்டம்பர் 2016 (14:37 IST)
தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க, கர்நாடகா மாநில அரசு 144 தடையாணை பிறப்பித்துள்ளது. 


 

 
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாட்களாக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பேருந்துகள் அடைத்து உடைக்கப்பட்டதை அடுத்து கர்நாடகா-தமிழகம் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 
பெங்களூரில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டதை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் கன்னட பேருந்துகள் மற்றும் ஓட்டுநர் ஒருவர், தமிழக அமைப்பினரால் தாக்கப்பட்டதால் மீண்டும் பதற்ற நிலை தொற்றிக்கொண்டது.
 
உச்ச நீர்திமன்றத்தின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவித்து கர்நாடகா அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேலும் கர்நாடகா மாநிலத்துக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் கன்னட அமைப்பினர் இன்னும் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
 
இதனால் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க, கர்நாடகா மாநில அரசு 144 தடையாணை பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்