மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் கர்ப்பிணியை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக ஜிகா கண்டறியப்பட்ட 14 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என்று தெரிய வந்துள்ளது.