கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 4,031 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இன்று கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 78 என்றும் அம்மாநிலத்தில் தற்போது சிகிச்சை பெற்றோர்களின் எண்ணிக்கை 1,07,315 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,24,509என்றும் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,03,985 என்றும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,190 என்றும் மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது