ஆம், மிசோரம் மாநிலத்தின் லுங்லேய் மாவட்டத்திலுள்ள லுங்க்சன் என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் ஆப்பிரிக்க ஸ்வைன் காய்ச்சலால் இறந்துள்ளது என மிசோரம் மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு இயக்குநர் ஆராய்ந்து தெரிவித்துள்ளார்.
மேலும் இது பரவாமல் இருக்க நடவடிக்கைகளும் எடுக்க்ப்பட்டு வருகிறது. தற்போது அந்த கிராமத்திலிருந்து நோய்வாய்ப்பட்ட பன்றிகளை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே போல அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவில் ஆயிரக்கணக்கான பன்றிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.