PG ஹாஸ்டலில் தங்குபவர்களுக்கு 12% ஜி.எஸ்.டியா? வாடகை உயர வாய்ப்பு என தகவல்..!

ஞாயிறு, 30 ஜூலை 2023 (14:34 IST)
PG  ஹாஸ்டலில் தங்குபவர்கள் இனி 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விடுதிகளில் வாடகை கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
PG ஹாஸ்டல் மற்றும் விடுதியில் தங்கபவர்கள் இனி வாடகையுடன் 12 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் கீழ் இயங்கும்  கர்நாடகாவின் அட்வான்ஸ் ரூலிங் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தனித்தனி சமையலறை வசதி இல்லாமல் ஒரு அறையை பலரும் பகிரும் விதமான அமைத்து கொண்ட விடுதிகள், குடியிருப்பு என்னும் வட்டத்திற்குள் வராது என்றும் எனவே குடியிருப்புக்கு வழங்கப்படும் ஜிஎஸ்டி வரி விலக்கு விடுதிகளுக்கு பொருந்தாது என்றும் இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
தினசரி வாடகை ரூபாய் ஆயிரத்துக்கும் கீழ் இருந்த வரிவிலக்கு கடந்தாண்டு ஜூலை 14ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்