ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்தது ஆன்லைன் விளையாட்டுக்கள்.. திரையரங்கு உணவுக்கு வரி குறைப்பு..!

புதன், 12 ஜூலை 2023 (07:36 IST)
50வது ஜிஎஸ்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுக்கு 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இதுவரை 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் அது 5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது.
 
 மேலும் புற்றுநோய் சிகிச்சைக்கு அளிக்கப்படும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், அரிய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டிலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அத்தியாவசியமான மருந்துகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்