நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகள்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
புதன், 16 ஆகஸ்ட் 2023 (17:54 IST)
நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை பயன்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்ததன் காரணமாக பொதுமக்கள் தற்போது மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் அரசு பேருந்துகளையும் மின்சார பேருந்துகளாக மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் 100 நகரங்களில் 57,619 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் மின்சார பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி இ-பஸ் சேவா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ரூபாயில் 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும் மீத தொகையை மாநில அரசுகள் செலுத்த வேண்டும் என்றும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மின்சார பேருந்துகளாக மாறும் நாள் விரைவில் இல்லை என்பது இந்த திட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.