தண்டவாளத்தில் படுத்திருந்த 10 சிங்கங்கள்.. ரயில் டிரைவர் எடுத்த சாதுரியமான முடிவு..!

Mahendran

செவ்வாய், 18 ஜூன் 2024 (11:01 IST)
குஜராத் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் வரிசையாக 10 சிங்கங்கள் படுத்திருந்த நிலையில் ரயில் டிரைவர் அதை கவனித்து எடுத்த சாதுரியமான முடிவு காரணமாக சிங்கங்கள் உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

குஜராத் மாநிலத்தில் அமரேலி என்ற மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ரயில் டிரைவர் தண்டவாளத்தில் 10 சிங்கங்கள் படுத்திருந்ததை பார்த்ததும் அவசரகால பிரேக் அழுத்தினார். இதனை அடுத்து ஒரு சில அடி தூரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் சிங்கங்கள் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஓட்டுநர் முகேஷ் குமார் என்பவர் அதிகாலை நேரத்தில் சிங்கங்கள் படுத்திருப்பதை பார்த்ததாகவும் இதனை அடுத்து சிங்கங்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உடனடியாக அவர் அவசர பிரேக்கை அழுத்தியதாகவும், ஓட்டுனரின் இந்த செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் பல சிங்கங்கள் இதே தண்டவாளத்தில் படுத்து இருந்த போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருப்பதாகவும் ஆனால் இந்த டிரைவர் சாதுரியமான முறையில் நடந்து கொண்டதால் சிங்கங்களின் உயிர் பிழைத்ததாகவும் இதே போல் மற்ற ரயில் ஓட்டுனர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்