ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: இளைஞர் கைது

புதன், 9 நவம்பர் 2011 (16:47 IST)
ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவுகளை அனுப்பி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் ராகுல் காந்தி பெயரிலான பேஸ்புக் கணக்கில் இருந்து கடந்த சில தினங்களாக தகவல்களும், உத்தரவுகளும் அனுப்பப்பட்டன.

ஆனால் அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள், பெண் நிர்வாகிகளுக்கு சந்தேகத்தை எற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில்சைபர் கிரைம் போலீசார், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர்.

இதில்அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரைங்கார்க் என்ற இடத்தில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கு 2 நாட்கள் முகாமிட்டு போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ஆங்கிட் (19) என்ற இளைஞர்தான், ராகுல்காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி தகவல்கள் அனுப்பி வந்த விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து ஆங்கிட் கைது செய்யப்பட்டார்.இவர் பி.ஏ. முதலாமாண்டு மாணவர் ஆவார்.

அவரிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆக்கிட் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்