மாரீசன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘சங்கு சக்கரம்’. திலீப் சுப்புராயன், ‘புன்னகைப்பூ’ கீதா ஆகியோருடன் 9 சுட்டிக் குழந்தைகள் நடித்துள்ளனர். ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஷபிர் இசையமைத்துள்ளார். விளையாட இடம் இல்லாததால், அந்த ஏரியாவில் உள்ள பேய்ப் பங்களாவுக்குள் விளையாடச் செல்கின்றனர் 7 குழந்தைகள். அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு சிறுவன், அவர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும், அவனும் பேய்ப் பங்களாவுக்குள் போகிறான்.
இன்னொரு சிறுவனுக்கு கார்டியனாக இருக்கும் இரண்டு பேர், அவனைக் கொன்று 500 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கப் பார்க்கின்றனர். அதனால், மியூஸியம் என்று சொல்லி பேய்ப் பங்களாவுக்குள் அவனை அனுப்பி வைக்கின்றனர். 9 குழந்தைகள் இருக்கும் அந்தப் பங்களாவுக்குள், சில பெரியவர்களும் மாட்டிக் கொள்கின்றனர். பேய்களுக்கும், அவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
குழந்தைகள் பேண்டஸி படம் என்று வெளியாகியிருக்கும் இந்தப் படம், பாதி பயமுறுத்தியும், பாதி சிரிக்க வைத்தும் செல்கிறது.