கருப்பன் திரைவிமர்சனம்

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (18:00 IST)
விஜய் சேதுபதி வெகு நாட்கள் கழித்து கிராமத்து கதையில்  நடித்துள்ள கருப்பன் திரைப்படம் முழுமையாக கமர்ஷியல் வழியில் பயணம் செய்துள்ளது.


 

 
விஜய் சேதுபதி வெகு நாட்கள் கழித்து கிராமத்து கதைகளில் நடித்துள்ளார். பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எல்லா கதைகளையும் போன்றே வழக்கமான கதையை கொண்டுள்ளது. திரைக்கதையில் கருப்பன் திரைப்படத்தை நாடக பாணியில் அழகாக கிராமத்து பின்னணியில் கோர்த்துள்ளார். 
 
பாபி சிம்கா, கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகி தன்யா ரவிச்சந்திரன் அன்பு என்ற காதபாத்திரத்தில் அழகான கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது நடிப்பை சகஜமாக வெளிப்படுத்தியுள்ளார்.
 
பாபி சிம்கா நாயகி தன்யா மீது ஆசைப்படுகிறார். விஜய் சேதுபதி, தன்யா ஆகியோரை பிரிக்க பாபி சிம்கா முயற்சிக்கிறார். தடைகளை மீறி விஜய் சேதுபதியும், தன்யாவும் திருமணம் செய்வதுதான் கதைகளம். 
 
கருப்பன் முதல் பாகம் முழுக்க கொண்டாட்டத்துடன் நகர்கிறது. இரண்டாம் பாகத்தில் தான் கதை தொடக்கம் பெறுகிறது. இரண்டாம் பாகம் வழக்கமான திரைப்படங்களின் பாணியில் இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளது. ஜல்லிக்கட்டு காட்சிக்கு படத்தில் உயிரோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
பாடல்களை தாண்டி இமானின் பின்னணி இசை படத்தை ரசிக்க வைக்கிறது. சக்திவேலுவின் ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது. மொத்ததில் கருப்பன் கிராமத்து பின்னணியில் வண்ணமையமான நாடகமாக கொடுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்