அனுஷ்காவின் ‘சைலன்ஸ்’ மீண்டும் ஒரு ஓடிடி மொக்கையா? டுவிட்டர் விமர்சனம்
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:33 IST)
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகை அனுஷ்காவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ’சைலன்ஸ்’. இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்களாகியும் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு கடைசியில் அமேசான் பிரைமில் நேற்று இரவு வெளியாகியுள்ளது
இந்த படத்தை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்த பலரும் ஏமாற்றம் அடைந்து மீண்டும் ஒரு மொக்கையான ஓடிடி படம் என டுவிட்டரில் விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துள்ள அனுஷ்காவின் நடிப்பு ஓரளவுக்கு ஓகே என்றாலும் படத்தில் சொதப்பலான திரைக்கதை மற்றும் மோசமான இயக்கத்தால் படம் பார்க்கும் வகையில் இல்லை என்று டுவிட்டரில் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அமேசானில் ஒளிபரப்பாகும் அனைத்து படங்களுமே மொக்கையாக இருப்பதாகவும் அந்த வகையில் இந்த படத்தையும் சேர்த்து கொள்ளலாம் என்றும் ஒரு ட்விட்டர் பயனாளி குறிப்பிட்டுள்ளார். விடிய விடிய கண்விழித்து இந்த படத்தை பார்த்தது வேஸ்ட் என்றும் தூக்கம்தான் கெட்டுப்போச்சு என்றும் ஒரு பயனாளி குறிப்பிட்டுள்ளார்
அஞ்சலியின் போலீஸ் கேரக்டர் காமெடியின் உச்சகட்டம் என்றும் மாதவனின் சிறப்பு தோற்றம் படத்திற்கு எந்த வகையிலும் உதவவில்லை என்றும் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள அசத்தலான காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மற்றும் ஹாலிவுட் நடிகர்களின் பங்கு மற்றும் சிறிய ஆறுதல் என்று படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சைலன்ஸ்’ திரைப்படத்திற்கு பெரும்பாலான நெகட்டிவி விமர்சனங்களும், ஒருசில பாசிட்டிவ் விமர்சனங்களும் டுவிட்டரில் வந்துகொண்டிருப்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது