பாவக்கதைகளை இயக்கும் தமிழ் இயக்குனர்கள்! – ஓடிடியில் வெளியீடு!

வியாழன், 1 அக்டோபர் 2020 (11:27 IST)
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் தமிழ் முன்னணி இயக்குனர்கள் இயக்க உள்ள ஆந்தாலஜி படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் உள்ள மக்களுக்கு ஓடிடி தளங்கள் பெரும் பொழுதுபோக்காக மாறியுள்ளன. இந்தியாவில் ஜியோ, அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடிக்கள் மிக பிரபலமாக உள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழில் தனது தயாரிப்பில் புதிய படத்தை வெளியிட உள்ளது.

தமிழின் முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, வெற்றிமாறன், கௌதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயக்கும் இந்த ஆந்தாலஜி படத்திற்கு “பாவக்கதைகள்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல அமேசான் ப்ரைம் ஓடிடி தளமும் தமிழில் ஆந்தாலஜி படம் ஒன்றை திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்