12 ஆயிரம் ஃபேஸ்புக் ஊழியர்கள் வேலைநீக்கமா?

வியாழன், 6 அக்டோபர் 2022 (19:03 IST)
12,000 ஃபேஸ்புக் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அடுத்த சில நாட்களில் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் 15 சதவீத ஊழியர்கள் குறைக்கலாம் என்றும் இதனால் 12 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்க கூடும் என்றும் கூறப்படுகிறது
 
கடந்த சில ஆண்டுகளாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறைந்து வருகிறது என்றும் ஏழு வருடங்களுக்கு பின் முதல் முறையாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அமெரிக்காவில் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து செலவுகளை குறைப்பதற்கான பேஸ்புக் நிறுவனம் ஊழியர்கள் குறைப்பு உள்பட ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்