பங்குச்சந்தை இந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை நிதானமாகவே வர்த்தகமாகி வருகிறது என்பதும் உயர்ந்தாலும் சரிந்தாலும் சிறிய அளவில்தான் மாற்றம் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 886 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 22,696 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பேங்க் பீஸ், ஐடிசி, ஐடி பீஸ், கரூர் வைஸ்யா வங்கி பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் மணப்புரம் கோல்டு, கல்யாண் ஜுவல்லர்ஸ், சிப்லா, ஏபிசி கேப்பிட்டல் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.