இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை 140 புள்ளிகள் சரிந்து 74,089 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 40 புள்ளிகள் குறைந்து 22,475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி மற்றும் கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.