பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீடு செய்யவே அச்சமா?

Siva

வெள்ளி, 15 மார்ச் 2024 (11:22 IST)
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் சமீபத்தில் பங்குச்சந்தை மிக மோசமாக இறங்கியது என்பதால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தனர் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று ஓரளவு பங்குச் சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே அச்சமாக இருக்கிறது என முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
மும்பை பங்குச்சந்தை இன்று 530 புள்ளிகள் சரிந்து 72, 565 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தை 182 புள்ளிகள் சரிந்து 21,964என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச் சந்தை பொதுவாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பானது என்றும் எனவே தகுந்த ஆலோசனை பெற்று நல்ல நிறுவனத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஐடிசி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உட்பட ஒரு சில பங்குகளை தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்