ஒரே நாளில் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.!

Siva

புதன், 17 ஜனவரி 2024 (11:00 IST)
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில்  1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்டது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ் தற்போது  1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 72,045 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 300 புள்ளிகள் சரிந்து 21,731 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை திடீரென ஒரே நாளில்  ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிந்து இருந்தாலும் இனிவரும் காலங்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் இந்த சரிவு தற்காலிகமானது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்