பொதுவாக பட்ஜெட் தினத்திலும் அதன் பிறகு சில நாட்கள் பங்கு சந்தை உயரும் என்ற நிலையில் இந்த ஆண்டு நேர்மாறாக பட்ஜெட் தினத்திலும் அதன் பிறகு இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் ஆரம்பித்த நிலையில் சென்செக்ஸ் 473 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 517 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 166 புள்ளிகள் உயர்ந்து 24, 673 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும் எச்.டி.எப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன