இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை தொடர் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்றும் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகி புதிய ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்தே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 215 புள்ளிகள் அதிகரித்து 76 ஆயிரத்து 818 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 383 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதுமே உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஹச்சிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.