அட்சய திருதியை நாளில் உயர்ந்த பங்குச்சந்தை.. தங்கம் சம்பந்தமான பங்குகள் உச்சம்..!

Siva

வெள்ளி, 10 மே 2024 (11:16 IST)
இன்று அட்சய திருதியை நாளை முன்னிட்டு அதிகாலை ஒரு முறையும் அதன் பின்னர் இன்னொரு முறையும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் தங்கம் சம்பந்தமான பங்குகளும் உயர்ந்துள்ளதால் பங்குச்சந்தையும் இன்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த நான்கு நாட்களாக பங்குச்சந்தை சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தனர் என்பதும் குறிப்பாக நேற்று சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதன் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 240 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 72,645 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 97 புள்ளிகள் அதிகரித்து 22,056 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய பங்கு சந்தையில் தங்கம் சம்பந்தமான நிறுவனங்கள் உட்பட அனைத்து பங்குகளும் உயர்ந்து வருவதாகவும் ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்