சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,565 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 52,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.53,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,020 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 88.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 88,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது