ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் சஸ்பெண்ட்.. 18 மாதங்கள் விளையாட தடை..!

Mahendran

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (10:52 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற பிரமோத் பகத் என்ற பேட்மிண்டன் வீரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்த உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அவரை 18 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 கடந்த மார்ச் மாதம் நடந்த 12 மாதங்களில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் ஊக்கமருந்து எதிர்ப்பு துறையால் பரிசோதனை செய்யப்பட்டார்.

இதனை அடுத்து பிரமோத் பகத் மேல்முறையீடு செய்த நிலையில், அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரது சஸ்பெண்ட் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து  இந்தியாவுக்காக தங்கம் என்ற  பிரமோத் பகத் 18 மாதங்கள் சஸ்பெண்ட் செய்ததை அடுத்து இந்த ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்