எனக்கு எதுவும் வேண்டாம், எனது கிராமத்திற்கு வசதி செய்து கொடுங்கள்: தங்கம் வென்ற வீரர் கோரிக்கை..!

Mahendran

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (10:18 IST)
சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நதீம் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நிலையில் அவருக்கு வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் என்ற நதீம் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும் தனது கிராமத்திற்கு சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

எனது கிராமத்திற்கு சாலை வசதிகள் செய்து விடுங்கள், சமையல் எரிவாயு வசதி ஏற்பாடு செய்யுங்கள், எங்கள் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் கட்டி கொடுங்கள், அவ்வாறு பல்கலைக்கழகம் ஏற்படுத்தினால் எங்கள் கிராமத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் மணிக்கணக்கில் பயணம் செய்து படிக்க வேண்டிய நிலை இருக்காது.

எங்கள் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து தருவதுதான் எங்களுக்கு சிறப்பான செய்தியாக இருக்கும், எனக்கும் ஒரு நல்ல பரிசாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் என்ற நதீம், தனக்காக எதையும் கேட்காமல் தன்னுடைய கிராமத்து மக்களுக்காக கோரிக்கை விடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்