மீண்டும் உச்சம் சென்றது தங்கம் விலை.. ஒரு கிராமுக்கு ரூ.44 உயர்வு..!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (11:08 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5720.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 352 உயர்ந்து ரூபாய் 45760.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6168.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49344.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 120 காசுகள் உயர்ந்து ரூபாய் 83.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 83000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்