சரிவுடன் ஆரம்பமாகும் பங்குச்சந்தை.. வாரத்தின் முதல் நாளில் சென்செக்ஸ் வீழ்ச்சி..!

Siva

திங்கள், 30 டிசம்பர் 2024 (09:52 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே சரிவுடன் வர்த்தகம் ஆகி வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்து 78534 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் குறைந்து 23 ஆயிரத்து 765 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, சிப்லா, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது. அதேபோல், ஆசியன் பெயிண்ட், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் லீவர், இன்ஃபோசிஸ், ஸ்டேட் பேங்க் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பங்குச்சந்தை இந்த வாரம் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்பதால், முதலீட்டாளர்கள் தகுந்த ஆலோசனையுடன் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்