பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (10:24 IST)
பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதையும் நேற்று பங்குச்சந்தை உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சற்றே குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வெறும் 8 புள்ளிகள் மட்டும் குறைந்து 65 ஆயிரத்து 949 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி நான்கு புள்ளிகள் மட்டும் உயர்ந்து 19,602 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
 
 பங்குச்சந்தை பெரிய அளவில் இன்று ஏற்ற இறக்கம் என்று கிட்டத்தட்ட நேற்றைய நிலையிலேயே வர்த்தகமாகி வந்தாலும் நேரம் ஆக ஆக என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
இருப்பினும் பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை கேட்டு முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்