இரண்டாவது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை.. 20,000ஐ நெருங்கும் நிப்டி..!
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (10:17 IST)
பங்குச்சந்தை நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயந்துள்ளதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து 66,624 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 28 புள்ளிகளும் உயர்ந்து 19,781 என விற்பனையாகி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் நிஃப்டி 20 ஆயிரத்து தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குச்சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.