பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும்: எப்படி தெரியுமா?

செவ்வாய், 23 மார்ச் 2021 (16:02 IST)
சமீப காலமாக விண்ணை முட்டி வந்த பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது. 

 
கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதன் காரணமாக மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கியிருக்கிறது. 
 
கடந்த 10 -14 நாட்களில், கிட்டத்தட்ட 10% அளவுக்கு விலை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் உள்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைவை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
 
இதற்கு முன்னர் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வந்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்