வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva

திங்கள், 21 ஏப்ரல் 2025 (09:50 IST)
இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகம் ஆகி கொண்டிருப்பதை அடுத்து, முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும், அதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை உள்பட உலக பங்கு சந்தைகள் ஆட்டம் கண்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருவது, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாள் ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து, 79,050 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதை போல தேசிய பங்கு சந்தை 133 புள்ளிகள் உயர்ந்து, 23,988 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், இண்டஸ் இன் வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், ஐடிசி, இந்துஸ்தான் லீவர், சிப்லா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்