சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களாக அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப்பிலும் ஆபாச செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்களை பலர் அனுப்பி வந்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாக்ராமில் அந்த பெண் பெயரிலேயே போலி ஐடி ஒன்று உருவாக்கப்பட்டு அதில் ஆபாசமான உடல்களோடு பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து புகைப்படங்களும் பதிவிடப்பட்டிருந்திருக்கிறது.
சம்பந்தப்பட்ட பெண் தொழில் அதிபரின் மகள் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அதேபள்ளியில் படித்து வரும் மாணவன் ஒருவன் நட்பாக பழகி வந்த நிலையில் ஒருநாள் காதலிப்பதாக தெரிவித்துள்ளான். அதற்கு மாணவி அவனது காதலுக்கு ஒப்புக்கொள்ளாததுடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவன், மாணவியின் தாயான தொழிலதிபரை போலி ஐடியில் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.