விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!

Siva

சனி, 7 மார்ச் 2026 (13:52 IST)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் குடும்ப விவகாரம் நீதிமன்ற படிநிலைகளில் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. 
 
ஏற்கனவே விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த சங்கீதா, தற்போது இடைக்கால மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், விவாகரத்து வழக்கு முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி கோரியுள்ளார். 
தான் லண்டனை சேர்ந்தவர் என்பதால் தங்குவதற்கு வேறு இடவசதி இல்லை என்றும், மனைவியாக அந்த வீட்டில் தங்குவதற்கு தனக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவாகரத்து வழக்கில் ஏப்ரல் 20 அன்று இருவரும் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தனது மனுவில் விஜய் மீது பல்வேறு புகார்களை அடுக்கியிருந்த சங்கீதா, தேவைப்பட்டால் அவருடன் தொடர்பில் இருக்கும் நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் எச்சரித்திருந்தார். 
 
சமீபகாலமாக விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சங்கீதாவின் இந்த அதிரடி மனு தவெக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்