பொண்டாட்டியை எப்படி மதிக்கணும்னு ராமராஜன்கிட்ட விஜய் கத்துக்கணும்!.. ஒரு பிளாஷ்பேக்!..

BALA

வெள்ளி, 6 மார்ச் 2026 (11:37 IST)
திரைத்துறையில் பலரும் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.. கமல்ஹாசன், பார்த்திபன், ஜிவி பிரகாஷ், தனுஷ், பிரபுதேவா என பெரிய லிஸ்ட் இருக்கிறது. ஆனால் விவாகரத்து பெற்றாலும் மனைவிக்குரிய மரியாதையை தேவைப்பட்ட இடங்களில் அவர்கள் கொடுக்கிறார்கள். மனைவியை அவர்கள் எங்கும் விமர்சித்து பேசுவதில்லை.

ஆனால், நடிகர் விஜய் விஷயத்தில் அது வேறு மாதிரி இருக்கிறது. தனது கணவர் வீட்டிலேயே நடிகையை கூட்டிவந்து குடும்பம் நடத்திகிறார்.. அதை கேட்டால் எங்களை கொடுமைப்படுத்தினார் என விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தை அணுகியிருக்கும் நிலையில் நேற்று திரிஷாவோடு ஜோடியாக ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய்..

இதை பார்க்கும்போது அவர் எதை பற்றியும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது.. ஏனெனில் நாம் என்ன செய்தாலும் நம்மை ரசிப்பதற்கும், நமக்கு ஆதரவு கொடுப்பதற்கும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது என அவர் நம்புகிறார்.  விஜயின் இந்த செயலை பார்த்து இதுவரை விஜய்க்கு ஆதரவு  கொடுத்தவர்களே முகம் சுழித்து வருகிறார்கள்.

இந்நிலையில்தான் நெட்டிசன்கள் சிலர் விஜயை ராமராஜனோடு ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
ராமராஜன் தனது மனைவி நளினியை விவாகரத்து செய்ய முடிவெடுத்தார். விவகாரத்து விஷயமாக ராமராஜன் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒரு நிருபர் நளினியை பற்றி கேள்விகேட்டார். அதற்கு ‘என் மனைவியை பற்றி நான் உங்களிடம் சொல்வது நாகரீகமாக இருக்காது’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார் ராமராஜன்..

நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த நாளில் அதே நிருபர் ராமராஜனிடம் ‘இப்போதுவது நளினி பற்றி சொல்லுங்கள்’ என்று கேள்வி கேட்க ‘எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது அவர் யாரோ.. நான் யாரோ.. எங்களுக்கு இடையே எந்த உறவும் இல்லை.. இன்னொருவர் வீட்டுப் பெண்ணை பற்றி நான் பேசுவது நாகரீகமாக இருக்காது’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார் ராமராஜன்..

கெரியரின் உச்சத்தில் இருக்கட்டும்.. ஆயிரம் கோடி சம்பாதிக்கட்டும்.. அதுவெல்லாம் சாதனையே இல்லை.. குறைந்தபட்சம் தன் குடும்பத்தை எவன் கண்ணியமாக மதிக்கிறானோ அவன்தான் மனிதன்’ என பதிவிட்டு வருகிறார்கள்..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்