சற்றே குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல் தான்..!

Siva

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (10:40 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று தங்கம் விலை மிக அதிகமாக உயர்ந்து ஒரு சவரன் 64 ஆயிரத்தை விட அதிகமானது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே குறைந்து இருந்தாலும் மீண்டும் ஒரு சவரன் ரூ.64,000 க்கு மேல் தான் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று ஒரு கிராம் 45 ரூபாயும் ஒரு சவரன் 360 ரூபாயும் குறைந்துள்ள நிலையில்  இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து  ரூபாய்   8,025 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 360 குறைந்து  ரூபாய்  64,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,754எனவும் ஒரு சவரன் ரூபாய் 70,032 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 109.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  109,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்