அசோக் லேலண்ட் ஷட் டவுன்; வெளியான அறிவிப்பு; ஊழியர்கள் கலக்கம்!

திங்கள், 9 செப்டம்பர் 2019 (12:26 IST)
அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன விற்பனை குறைந்ததால் குறிப்பிட்ட ஆலைகளில் உற்பத்தி நடைபெறாது என அறிவித்துள்ளது. 
 
இந்தியா முழுவதும் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பும் அளித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், வாகன விற்பனை குறைந்ததால் உற்பத்தி நடைபெறாது என்ற அறிவிப்பை அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆம், ஆலைகளின் உற்பத்தி நிறுத்தம் தொடர்பாக தேசிய பங்கு சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது. 
ஆம், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாகவும், மும்பை மற்றும் ராஜஸ்தானில் 10  நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாகவும் உத்தரகண்ட் 18  நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. 
 
அதோடு, ஓசூரின் 1 மற்றும் 2 ஆவது உற்பத்தி மையங்களை 5 நாட்கள் மூடுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்