11,319 தொண்டு நிறுவனங்கள் உரிமம் ரத்து

சனி, 5 நவம்பர் 2016 (21:57 IST)
ஜூன் மாதம் இறுதிக்குள் புதுப்பிக்கத் தவறிய 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.


 

 
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்குவதற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் நிதி பெறுகின்றனர். அப்படி வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டது.
 
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதிக்குள் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால் 11,319 தொண்டு நிறுவனங்கள் இதுவரை உரிமங்களை புதுபிக்கவில்லை. 
 
எனவே உரிமம் புதுப்பிக்காத 11,319 நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. இச்செய்தியை மத்திய உள்துறை அமைச்சகம் அதன் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. 
 
மேலும் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்